ஆன்மீகத்தேடல்

ஆன்மீகம் ஜோதிடம் மருத்துவம் பொது அறிவு தகவல்கள் அனைத்தும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்


All times are UTC + 5:30 hours [ DST ]


Forum rules


ஆயுர்வேத மருத்துவ பயன்கள்,விவரங்கள் 
Post new topic Reply to topic  [ 1 post ] 
Author Message
 Post subject: மூன்று மூலிகையில் -உலக அதிசயம்
New postPosted: Tue Mar 19, 2013 1:42 pm 
Offline
நடத்துனர்
நடத்துனர்
User avatar

Joined: Wed Jan 30, 2013 3:23 pm
Posts: 168
Location: சென்னை
தரப்புள்ளிகள்: 1660
திருமணம் ஆனவரா?: ஆம்
மூன்று மூலிகையில் -உலக அதிசயம் -த்ரிகடு சூர்ணம்
( ref-பாவப்ரகாச நிகண்டு மத்யம கண்டம்)


இந்த மருந்து பல அதிசயங்களை செய்யும்


தேவையான மருந்துகள்:
1. சுக்கு சுந்டீ - 10 கிராம்
2. மிளகு மரீச்ச - 10 “
3. திப்பிலி பிப்பலீ - 10 “Image
Image

Image
குறிப்பு -சுக்குக்கு புற நஞ்சு எனவே -சுக்கை மேல் தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும்.


செய்முறை:


இவைகளை முறைப்படி பொடித்துச் சலித்து ஒன்று கலந்து பத்திரப்படுத்தவும்.
அளவு:


½ முதல் 1 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.
அனுபானம்:


தேன், நெய், தண்ணீர்.
தீரும் நோய்கள்:


விட்டுவிட்டு வரும் முறைக்காய்ச்சலைப் போன்ற பலவிதகாய்ச்சல்கள் (ஜ்வர), வயிற்று உப்புசம் (ஆத்மான), உணவில் விருப்பமின்மை (அரோசக), பசியின்மை (அக்னி மாந்த்ய), பழுதடைந்த செரிமானத்தால் வரும் நோய்கள் (ஆமதோஷ), கழுத்தில் தோன்றும் நோய்கள் (காலரோக), பீனிசம் (பீனஸ), தோல் நோய்கள் (குஷ்ட), இருமல், ஜலதோஷத்துக்கு சர்க்கரை மற்றும் தேனுடன் சேர்த்துத் தரப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை -
 1. திரிகடு என்ற இந்த திரிகடுகு -பல மருந்துக்கு துணை மருந்தாக -அனுபானமாக உபயோகப்பதுண்டு
 2. திரிகடுகு -சிறந்த கார்ப்புள்ளது -நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல
  பிரச்சனைகளை தீர்க்கவல்லது ,நெஞ்சு சளி ,ஜலதொதோஷத்தை நீக்கும் ..நுரையீரல்
  மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனை கூட்டும் ,இம்மண்டல பலஹீனத்தை
  போக்கும்
 3. திரிகடுகு -சிறந்த கார்ப்புள்ளது -நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல
  பிரச்சனைகளை தீர்க்கவல்லது ,நெஞ்சு சளி ,ஜலதொதோஷத்தை நீக்கும் ..நுரையீரல்
  மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனை கூட்டும் ,இம்மண்டல பலஹீனத்தை
  போக்கும்
 4. நுரையீரலின் உயிர் சக்தியை அதிகபடுத்தும் ,புதுப்பிக்கும் ,கபம் சார்ந்த பிரச்சனைகளை போக்கும்
 5. இன உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும் ,பெண்களின் கரு முட்டை வெடித்தல்
  குறைபாடு உள்ளவர்களுக்கு பட்டு கருப்புடன் கொடுத்து சரிசெய்த பல நோயாளிகள்
  என்னிடம் உள்ளனர் ,ஆண்களின் விந்தடைப்பு என்ற பிரச்சனைக்கும் -திரிகடு
  சார்ந்த ஷட்தர்ணம் சூரணத்தை பயன்படுத்தி வெற்றி கண்டதுண்டு
 6. மேலும் உடல் எடை கூடிய நோயாளிகள் ,அதிக கொழுப்பு சத்துள்ள நோயாளிகள்
  ,த்ராய்ட் குறைவாக சுரக்கும் நோயாளிகள் ,உடல் வீக்கம் சார்ந்த நோயாளிகள்
  ,மற்றும் வளர் சிதை மாற்றமுள்ள நோயாளிகளில் இந்த மருந்து -தக்க துணை
  மருந்துகளோடு நன்றாக வேலை செய்யும்
 7. செரிமான சுரப்பி ,வயிற்றில் சுரக்கும் நொதி கோளாறுகள் -எப்படி
  இருந்தாலும் சரி செய்து -ந்யூற்றிசன் என்ற சக்தி குறைபாடில்லாமல் ,எல்லா
  குடல் உறிஞ்சுகளையும் வேலை செய்யவைத்து ,உடல் சக்திகளை வேலை செய்யவைக்கும்
  ..
 8. வலிகளை போக்கும் மருந்துகளில் -இந்த மருந்தை பல வலி நிவாரண மூலிகை மருந்துகளின் சேர்க்கையோடு சேர்ப்பதால் நல்ல பலன் கிடைக்கும்
 9. பல பற்ப ,செந்தூரங்களை கொடுக்கும் போது -த்ரிகடுவை மூல மருந்து சூரணமாக பயன் படுத்தலாம்
இப்போது மாத்திரை வடிவில் எளிதாக கிடைக்கிறது ..ஆனால் பொடிவடிவில் கிடைக்கும் சூரணமே சிறந்த பலன் அளிக்கும்

திரிகடுகு சேராத ஆயுர்வேத ,சித்த ,யுனானி மருந்தே இல்லை எனலாம்

_________________
Image


Top
 Profile E-mail  
 
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 1 post ] 

 உல்நுழைந்தவர் விவரம்
Login
Username:
Password:
I forgot my password
 
 
 
Register
Terms of use
Privacy policy
 
 பார்வையாளர்களின் எண்ணிக்கை
 பகிர்ந்து கொள்க
Share
 FM பாடல்கள்

All times are UTC + 5:30 hours [ DST ]


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
cron
Create a free forum | phpBB © | Support Forum | Report Abuse